Tamil recipes - III
Interesting recipes by Mrs. Akila Satish
நிலக்கடலை ச்சிக்கி
சர்க்கரை - 1 கப்
தோல் நீக்கிய நிலக்கடலை - 1 கப்
நெய் - 2 டீஸ்பூன்
நிலக்கடலையை எண்ணெயில்லாமல் வறுத்து ஒன்றிரண்டாக பொடி செய்யவும். சர்க்கரையை வாணலியில் போட்டு சிம்மில் வைத்துக் காய விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். பிறகு நெய்யைச் சேர்த்து லேசாகக் கிளறவும். ஓரிரு நிமிடங்களில் சர்க்கரை இளகி பழுப்பு நிறப் பாகாக மாறி லேசாகப் பொங்கி வரும். உடனே அடுப்பிலிருந்து இறக்கி உடைத்த கடலைகளைப் போட்டுக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டவும். நெய் தடவிய டபராவின் அடிப்பாகத்தால் அழுத்தி நன்கு தட்டி சமன்படுத்தி கையோடு கட்டி போடவும். சர்க்கரை அதிகம் முறுகாமல் பார்த்துக்கொள்ளவும். ஐந்து நிமிடங்களில் கட்டிகளைத் தட்டிலிருந்து பிரித்து விடலாம்.
கசகசா பாயசம்
கசகசா - 50gm
தேங்காய்துருவல் - 2 tbsp
அரிசி - 1 tbsp
சுகர் - 150gm
பால் - 3 /4 லிட்டர்
ஏலக்காய்ப்பொடி - 1 /4 tsp
குங்குமப்பூ - 1 சிட்டிகை
கேசரிப்பவ்டர் - 1 சிட்டிகை
கசகசா, தேங்காய்துருவல், அரிசி மூன்றையும் முழுகும் அளவிற்குக் கொதிக்கும் நீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு அதை மிக்ஸ்சியில், வெண்ணெய் போன்று நன்றாக அரைக்கவும். அரைத்த தண்ணீர் 4 டம்ளர் இருக்கும். அதை நன்றாக 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு சுகர் போட்டு கொதிக்க வைத்து கீழே இறக்கினதும், நன்றாகக் காய்ச்சின பால், ஏலக்காய்ப்பொடி, குங்குமப்பூ, கேசரிப்பவ்டர் போட்டுக் கலக்கவும்.