1. பூஜைகளும் பலன்களும்

The Power of Mantras

Author: Mrs. Sarada Venkateswaran

வணக்கம்

முதலில் நாம் பிள்ளயாரை வணங்க வேண்டும்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி னுடந்ங்காது

பூகொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு

இங்கு எனக்கு தெரிந்த சில பூஜைகளையும் அவற்றின் பலன்களையும் தெரிவிக்கிறேன்

.அதை படித்து பார்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதில் சிலவை கீழே வருமாறு:-

  1. லக்ஷ்மி கடாக்ஷம் பெருக:-

  2. வியாபாரம் பெருக:-

  3. திருமணத்தடை விலக:-

  4. குழந்தைபேறு உண்டாக:-

  5. கடன் தொல்லை தீர:-

  6. தீரா வியாதிகளிலிருந்து நிவாரணம் பெற:-

  7. காணாமல் போன பொருள் கிடைக்க:-

  8. செய்வினை விலக ; தீய சக்திகளின் தாக்கம் தீர:-

  9. பூர்வ ஜென்ம பாபம் விலக:-

  10. கணவன் மனைவி ஒற்றுமைக்கு:-

  11. வாஸ்து குறை தீர:-

தற்பொழுது இதன் விளக்கத்தை பார்ப்போம்.

  1. லக்ஷ்மி கடாக்ஷம் அடைய:

   1. எத்தும் அடியவர் ஈறே ழுலகினை யும் படைத்தும்

   2. காத்தும் அழித்தும் திரிபவ ராம் கமழ் பூங்கடம்பு

   3. சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும்நின் தாள்

   4. இனைக்கேன் நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு நகையுடைத்தே

   5. அல்லது

   6. தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா

   7. மனம்தரும் தைவ வடிவும்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா

   8. இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

   9. கனம்தரும் பூகுழளால் அபிராமி கடைக்கண்களே

   10. இந்த இரண்டு ஸ்லோகங்களும் ஸ்ரீ அபிராமி அந்தாதியில் இருந்து

   11. எடுக்கப்பட்டது . இந்த ஸ்லோகங்களை தினசரி மூன்று முறை சொல்லி பயன் அடையலம்

   12. அல்லது

   13. விஸ்தாவ ரஸ்ஸ்தவரஸ்தாநு : ப்ரணாமம் பீஜ-மவ்யயம்

   14. அர்த்தொனார்த்தோ மகாகோசோ மஹாபொகொ மஹாதான:

   15. இந்த விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை சொல்லி வரவும்

ஸ்மரம் யோநிம் லக்ஷ்மிம் த்ரிதய மித மாதௌ தவமநோ:

நிதாயைகே நித்யே நிரவதி மஹாபோக ரஸிக:

பஜந்திதவம் சிந்தாமணி குண- நிபத்தாக்ஷ - வலய

ஸிவாக்நௌ : ஜுஹ்வந்த :ஸுரபிக்ருத தாராஹுதி - சதை:

ஸ்ரீ சொவுந்தர்யா லஹ்ரியில் உள்ள இந்த ஸ்லோகத்தை காலையில்

கிழக்கு முகமாக அமர்ந்து , 45 நாட்கள் தினம்தோறும் 1000 முறை ஜபித்தால் செல்வம் மென்மேலும் வளரும்.

தேன், வெண்பொங்கல், சித்ரான்னம் நிவேதனம் சைய்யவும்.

2. லக்ஷ்மி நரசிம்ஹன் கோவிலில் நெய் விளக்கு போட்டு சில ஏழைகளுக்கு அன்னதானம் சைய்யவும்.

If you have any questions You can contact the author at saradakoduvayur@gmail.com

Top