Tamil Recipes explained by Mrs. Akila Satish
BADAM HALWA
INGREDIENTS
முந்திரி - 100gm
பாதாம் - 100gm
சுகர் - 200gm
sweetless kova - 50gm
குங்குமப்பூ
ஏலக்காய்ப்பொடி
முதலில் முந்திரியை சிறிது சிவக்க வறுத்து, ஊறவைத்து தோலுரித்த பாதாமையும் சேர்த்து நீர் சேர்த்து நைசாக அரை. சுகரில் நீர் ஊற்றி ஒற்றை கம்பிப்பாகாக வை. அதில் குங்குமப்பூ, அரைத்த பாதாம், முந்திரி விழுது சேர்த்து நன்கு கிளறு. பின் நெய், kova, ஏலக்காய்ப்பொடி சேர்த்து ஒட்டாமல் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி கட் செய்.
நெய் பிஸ்கட்
தே.பொருட்கள்
மைதா - 100gm
நெய் - 50gm
Baking powder - 1 /2 tsp
சுகர் - 50gm
vanilla essence - 1 /2 tsp
நெய், பொடித்த சுகர் சேர்த்து மரக்கரண்டியால் நன்கு அடிக்கவேண்டும். பின் அதில் மைதா, Baking பவுடர் சலித்து அதில் சேர். vanilla essence சேர்த்து நன்கு பிசைந்து வட்டமாக 3 inch thick இட்டு சிறிய சிறிய பிஸ்கட்டாக கட் செய்து நடுவில் முந்திரி வைத்து preheat செய்த (180 டிகிரி) ஓவன்-இல் 15 -20min வை.
COCKTAIL SAMOSA
மைதாவில் உப்பு, ஆயில் விட்டு கெட்டிஆகப்பிசை. முட்டைக்கோசை(பச்சையாகவே) பொடியாக நறுக்கு அதனுடன், வெங்காயம் பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய், உப்பு, கருவேப்பிலை போட்டு பிசைந்து பத்து நிமிடம் ஊறவை. பின் அதை நன்கு பிழிந்து அதில் காரப்பொடி சேர்த்து வை. மைதாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, மூன்றாக கட் செய், கட் செய்த piece -இல் முட்டைக்கோசை வைத்து ரிப்பன் மடிப்பது போல மடித்து ஆயில்இல் பொரித்தெடு.
பாசிப்பருப்பு குலோப்ஜாமூன்
பாசிப்பருப்பு வேகவைத்தது - 1 cup
பால் பவுடர் - 1 /2 cup
பனீர் - 1 /2 cup
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
சமையல் சோடா -1 சிட்டிகை
மைதாவில் சோடா, பாசிப்பருப்பு மசித்தது, பால் பவுடர், பனீர் அனைத்தையும் ஆயில்இல் பொரித்தெடுத்து ஜீராவில் ஊறவை.
kaaju burfi
cashewnut - 200gm
சுகர் - 150gm
Milk maid - 1 கப்
குங்குமப்பூ
ஏலக்காய்ப்பொடி
kesaripowder
பால் - 3 /4 டம்ளர்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
ஒரு மணிநேரம் ஊறிய முந்திரியுடன் நெய் தவிர அனைத்தையும் சேர்த்து அரைத்து microwave oven இல் 5min வை. மீண்டும் 3 or 3 min நெய் சேர்த்து கிளறி வை. பிறகு கட் செய்.
பொட்டுக்கடலை முறுக்கு
பொட்டுக்கடலை மாவு - 1 /2 கப்
அரிசி மாவு - 1 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
பெருங்காயம்
உப்பு
அனைத்தையும் மிக்ஸ் செய்து தேன்குழல் அச்சில் பொரித்தெடு.
அரிசி அப்பளம்
5 பங்கு அரிசி, 1 பங்கு ஜவ்வரிசி வீதம் மில்லில் அரைத்து அத்துடன் விழுதாக அரைத்த பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிது வெதுவெதுப்பான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து cooker இல் வைத்து 3 விசில் வந்தவுடன் இறக்கவும். ஆறிய மாவில் எலுமிச்சை சாறு விட்டு கையாலேயே பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி அப்பளம் இடவும், காயவைத்து பொரி.