8. காணாமல் போன பொருள் கிடைக்க

காணாமல் போன பொருள் கிடைக்க

யாவரும் போற்றும் என்றும்

யாங்கணும் உள்ள செல்வா

மூவரும் போற்றும் உன்னை

முறையொடு பூசை செய்யின்

போனதோர் பொருளும் சேரும்

தீனபந் தேன்றே உன்னைத்

தெளிந்தவர் சொன்னார் காக்க

இந்த ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை 11 நாட்கள் சொல்லி வந்து கடைசி நாளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி பக்தர்களுக்கு வினியோகம் செய்யவும்.

(அல்லது)

ஓம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நம: |

கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||

தஸ்ய ஸ்மரந மாத்ரேன கதம் நஷ்டம் ச லப்யதே ||

கார்த்த வீர்யார்ஜுனனுக்கு ஆயிரம் கைகள். இந்த ஸ்தோத்திரத்தை ஜபிப்பதால் தன ஆயிரம் கைகளால் உங்களுக்கு நஷ்டம் வராமல், காணாமல் போன பொருளைக் கண்டுபிடிக்க உதவுவான். அவனை உதவிக்கழைக்கும் சுலோகம் இது.

(அல்லது)

அரைக்காசு அம்மனை வேண்டினால் (பொருள் கிடைத்தவுடன் வெல்லம் நிவேதனம் செய்கிறேன் என்று வேண்டிக்கொண்டால், ) பொருள் கிடைக்கும்