Tamil Recipes explained by Mrs. Akila Satish
நாகர்கோவில் ஆப்பம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 2cup
புழுங்கலரிசி - 1/2 cup
தேங்காய்துருவல் - 2cup
செய்முறை
அரிசி ஊறியவுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து மிகவும் நைசாக அரைத்து எடுக்கவும். உரல் கழுவிய நீரில் 1 கரண்டி மாவைக் கரைத்து, 2 தம்ளர் கொதிக்கும் நீரில் கரைத்த மாவை இட்டு கூழ் காய்ச்சவும். கூழ் நன்கு ஆறிய பின் அரைத்த மாவுடன் கூழைச் சேர்த்து நன்கு பிசைந்து வைத்து விடுங்கள். மறுநாள் காலை சிட்டிகை சோடா உப்பைத் தண்ணீரில் கரைத்து மாவில் ஊற்றி நன்கு கலக்கி ஆப்பம் செய்யவேண்டும்.
மில்க் சாக்லேட்
தேவையான பொருட்கள்
ஐசிங் சர்க்கரை - 1 கப்
மில்க் பவுடர் - 1/2 cup
டிரிங்கிங் சாக்லேட் பவுடர் - 1 கப்
கோகோ பவுடர் - 1 /4 கப்
ஆரஞ்சு அல்லது லெமன் ஜூஸ் - 1 /4 கப்
செய்முறை
எல்லாப் பொடிகளையும் கட்டியில்லாமல் மூன்று முறை சலித்துக் கொள்ளவும். சிறிது நீர் சேர்த்துப் பிசையவும். (கெட்டி சப்பாத்தி மாவு பதம்). ஜூசை மேலே தெளித்து மீண்டும் பிசையவும். இந்தக் கலவையை பாலிதீன் பையில் வைத்து பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை காயாமல் நிற்கும். விதம் விதமான வடிவங்களில் சாக்லேட் செய்ய இந்தக் கலவையை கடைகளில் கிடைக்கும் ரப்பர் மொல்ட்களில் நெய் தடவிய பின் அடைக்கவும். ஒரு மணி நேரம் காற்றாட அறையிலேயே காய விட்டு விட்டுப் பிரித்து எடுக்கவும். மீண்டும் மூன்று மணி நேரம் காய விடவும். இப்போது மில்க் சாக்லேட் தயார்!
மைக்ரோ மைசூர் பாக்
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 300 கிராம்
நெய் - 300 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
தண்ணீர் - 200 மில்லி
முந்த்ரிப்பருப்பு - 50 கிராம்
பேகிங் சோடா - வேண்டுமென்றால் ஒரு சிட்டிகை
செய்முறை
1 கடலை மாவையும், பேகிங் சோடாவையும் நன்கு சலித்தெடுத்துக் கொண்டு அதை நெய்யை உருக்கிக் கொண்டு அதில் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
2 சர்க்கரைப் பாகை இரண்டு கம்பி பாகு பதத்திற்குச் செய்து அதை சிறிது சிறிதாக கடலை மாவில் விட்டு திக்கான பேஸ்ட் போன்ற கலவை ஆக்கவும்.
3 பின் சிறு சிறு மைக்ரோவேவ் (ஐஸ் cube) பாத்திரத்தில் நெய் தடவி கடலை மாவு கலவையால் நிரப்பவும்.
4 ஒன்றரை நிமிடத்திற்கு சாதாரண நார்மலான பவரில் பேக் செய்யவும்.
5 பேக் செய்து முடித்தவுடன் அதை நான்கு அல்லது ஐந்து நிமிடத்திற்கு ஆற விடவும். பின் அதை பாத்திரத்திலிருந்து எடுத்து வைக்கவும்.
6 ஒரு பெரிய பாத்திரத்தில் திரும்பவும் அந்த மைசூர் பாக்குகளை வைத்து அரை நிமிடத்திற்கு பேக் பண்ணினால் சூடான, சுவையான மைசூர் பாக் தயார்.
வெந்தய இலை பக்கோடா
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 2 தம்ளர்
வெந்தய இலை - 1 கட்டு
சீரகம் - 3 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 2 பொடிப்பொடியாக நறுக்கியது
வெங்காயம் - 2 பொடிப்பொடியாக நறுக்கியது
பேகிங் பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை
இவை எல்லாவற்றையும் சிறிதும் நீர் இல்லாமல் நன்றாகப் பிசையவும். வெங்காயம் போடுவதால் நீர் தேவையில்லை. பின்னர் எண்ணெய் சூடானபின் சிறு சிறு உருண்டைகளாகப் போடவும். நன்றாக வெந்த பின் எடுக்கவும். வெந்தய இலையை நறுக்காமல் அப்படியே உதிராகப் போடலாம்.
DAHI CAKE
தேவையான பொருட்கள்
தயிர் - 1 கப்
மைதா - 3 /4 கப்
பால் - 1 தேக்கரண்டி
ஆயில் - 1 3 /4 கப்
பேகிங் பவுடர் - 2 மேசைக்கரண்டி
கோகோ பவுடர் - 5 தேக்கரண்டி
சுகர் - 1 கப்
வனிலா essence - 1 தேக்கரண்டி
மைதா, பேகிங் பவுடர், கோகோ பவுடர் சேர்த்து நன்கு சலிக்கவேண்டும். ஒரு பாத்திரத்தில் புளிப்பில்லாத கெட்டித்தயிர், சுகர் சேர்த்து கரையும் வரை கலக்கு, அதில் ஆயில், வனிலா essence சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கு. பின் அதில் சலித்த மைதா, கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலக்கு, அதில் பால் விட்டு நன்கு கலக்கு, microwave oven - இல் high power - இல் 8min வைத்து எடு.
CARAMEL HALWA
ஊறவைத்த ரவை - 1 கப்
சுகர் - 2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த்தூள்
ரவையை நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவை. நெய் விட்டு அதில் சுகர் சேர்த்து பிரவுன் ஆகும் வரை கிளறு, அதில் ஊறவைத்த ரவையை சேர்.(நீரைப்பிழிந்து) முந்திரிப்பருப்பு,ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒட்டாமல் வந்ததும் இறக்கி கட் செய்.