7. வயிற்று வலி நீங்க
வயிற்று வலி நீங்க
----------
சௌந்தரிய லகரி சுலோகம்
--------------------------
தவாதாரே மூலே ஸஹ சமயயா லாஸ்ய- பரயா
நவாத்மானம் மன்யே நவரச- மகாதாண்டவ -நடம்
உபாப்யா- மேதாப்யா-முதய-விதி-முதிச்ய தய்யா
சநாதாப்யம் ஜஜ்ஞெ ஜனகஜனநீம் த ஜகதிதம்
இந்த ஸ்லோகத்தை தினசரி ஒன்பது முறை ஜபித்து வெண்பொங்கல் நிவேதனம் செய்யது வந்தால் வயிற்று வலி குணமாகும் .
-------------------- வெப்பு நோய் குணமாக:- ----------- மாருதி கவசம் -------------- காக்க அசோக வனம் சென்றாய் கண்டான் அன்னை சீதையினை நோக்கம் ஒன்றே ராமதூதன் நுட்ப்பம் வாக்கில் கொண்டானே ஆக்கம் சேர்க்க இலங்கையினை ஆழலில் எரிய விட்டவன்தான் ஆக்கை வெப்பிலே உழலாமல் அனுமன் என்னை காத்திடுக இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று முறை சொல்லி அனுமனுக்கு வெண்ணை நிவேதனம்,செய்யவும் . வெப்பு நோய் குணமாகும். --------------------உயர் பதவி கிடைக்க
----------------------------------
விநாயகர் க்கு அர்ச்சனை செய்து ஒன்பது ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும்
அல்லது
"பின்னே திரிந்து உன் அடியரைப்பேணி
பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்
முதல்மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும்
அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல்
நின்று ஏத்துவனே"
இந்த அபிராமி அந்தாதி ஸ்லோகத்தை தினசரி மூன்று முறை சொல்லி வரவும்.
நீங்கள் நினைத்த காரியங்கள் இடையூறின்றி வெற்றி பெரும்.
அல்லது
அருகிலுள்ள சிவாலயம் சென்று ஈஸ்வரனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து தேங்காய்
சாதம் நிவேதனம் செய்து பக்தாதிகளுக்கு விநியோகம் செய்து , அன்றிலிருந்து
ஒன்பது நாட்கள் "ஓம் நமச்சிவாய " மந்திரத்தை தினசரி நூற்றிஎட்டு முறை ஜபம்
செய்து ஒன்பதாவது நாளிலும் ஈஸ்வரனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து தேங்காய் சாதம்
நிவேதனம் செய்து பக்தாதிகளுக்கு கொடுத்து பிரார்த்தனை செய்தால்
வேலையில் உயர் பதவி கிடைக்கும்
அல்லது
"கண்டேன் ஒரு சீதையையே
கருதேன் இனி ஸ்ரீ ராமனையே நான்
வென்றேன் எனவே விழைந்தானையே நான்
கொண்டேன் மனமே குளம் வாழ்வதற்கே"
இந்த மாருதி கவசத்தில்லுள்ள ஸ்லோகத்தை தினசரி மூன்று முறை சொல்லி வரவும்